ஆண்டுதோறும் 14,000 பேரை சி.ஐ.எஸ்.எப்.,பில் சேர்க்க முடிவு
ஆண்டுதோறும் 14,000 பேரை சி.ஐ.எஸ்.எப்.,பில் சேர்க்க முடிவு
ADDED : ஆக 13, 2025 03:43 AM
சென்னை: சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில், அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு ஆண்டுதோறும் 14,000 வீரர்களை சேர்க்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு பணியில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் இந்த துணை ராணுவ படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும், 14,000 வீரர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சி.ஐ.எஸ்.எப்., உயர் அதிகாரிகள் கூறியதாவ து:
நம் நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் வகை யில், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு, நாடு முழுதும் தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது, சி.ஐ.எஸ்.எப்.,ல் 1.62 லட்சம் வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை, 2.20 லட்சத்திற்கு மேல் உயர்த்த, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 14,000 புதிய வீரர்கள் தே ர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஆண்டில் 13,230 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நடப்பாண்டு, 14,000 பேரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.