குற்றங்களை தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு ; மூன்று மாநில போலீஸ், வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
குற்றங்களை தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு ; மூன்று மாநில போலீஸ், வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
ADDED : பிப் 21, 2024 06:38 AM

கூடலுார் : தமிழகம், கர்நாடகா, கேரளா போலீஸ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று மாலை நடந்தது.
கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல்; முதுமலை துணை இயக்குனர் வித்யா; ஈரோடு எஸ்.பி., ஜெகவர்; கேரளா மலப்புரம் எஸ்.பி., சசிதரன்; கர்நாடகா சாம்ராஜ் நகர் எஸ்.பி., பத்மினி சாஹு; நீலகிரி கூடுதல் எஸ்.பி., சவுந்திரராஜன் ஆகியோர், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விவாதித்தனர்.
கோவை சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர் கூறும்போது, ''ஒருங்கிணைந்து கண்காணிப்பது உட்பட இணைந்து செயல்பட மூன்று மாநில போலீசார் சார்பில் முடிவு செய்யப்பட்டது,'' என்றார்.

