ADDED : மார் 04, 2024 12:48 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் 122.50 அடியாக குறைந்தது.
கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறு அணைப் பகுதியில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவுகிறது.
ஜன.,17ல் 139 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 122.50 அடியானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 கன அடியாக இருந்தது.
தமிழகப்பகுதிக்கு குடிநீர், இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3123 மில்லியன் கன அடியாகும். தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது நடந்துவரும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு போதுமானதாக இருந்த போதிலும், மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் முதல் போக நெல் சாகுபடிக்காக வரும் ஜூன் முதல் தேதியே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும்.
அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 72 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

