தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மீதான அவதுாறு வழக்கு ரத்து
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மீதான அவதுாறு வழக்கு ரத்து
ADDED : நவ 29, 2024 07:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதுாறாக பேசியதாக, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.ராஜன் மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.ராஜன். இவர், 2013ல் புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சி மற்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதுாறாக பேசியதாக, புதுக்கோட்டை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.பி.ராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அவதுாறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
***