சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
ADDED : டிச 05, 2024 01:07 PM

சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க., தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, 'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்ததாக பேசியிருந்தார். இது அப்பட்டமான அவதூறு என கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பாபு முருகவேல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.,05) 'சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை' எனக் கூறி, அவருக்கு எதிரான அவதூறு வழக்கை சுப்ரீம்கோர்ட் முடித்து வைத்தது. வழக்கைத் தள்ளுபடி செய்வதாக, சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதை குடுத்து, வழக்கை அ.தி.மு.க., தரப்பு வாபஸ் பெற்றறது.