சென்னையில் விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம்
சென்னையில் விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம்
ADDED : ஜன 14, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை விமானநிலையத்தில் நிலவும் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று (ஜன.,14) போகி பண்டிகை என்பதால் அருகில் உள்ள கிராமங்களில் எரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து கிளம்பிய புகை மண்டலம் விமான ஓடுபாதை மற்றும் சென்னை விமான நிலையம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சில வேறு ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

