தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/டில்லி உஷ்ஷ்ஷ்: அ.தி.மு.க.,வுக்காக காத்திருக்கும் பா.ஜ.,

டில்லி உஷ்ஷ்ஷ்: அ.தி.மு.க.,வுக்காக காத்திருக்கும் பா.ஜ.,

டில்லி உஷ்ஷ்ஷ்: அ.தி.மு.க.,வுக்காக காத்திருக்கும் பா.ஜ.,


ADDED : மார் 10, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'வரும் 13 அல்லது 14 தேதிகளில் லோக்சபா தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்' என, சொல்லப்படுகிறது. தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.,வும் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி ஏறக்குறைய முடிவாகிவிட்டது. அ.தி.மு.க., கூட்டணி இன்னும் இழுபறியில் உள்ளது. முதல் பட்டியலை வெளியிட்ட பா.ஜ., தமிழகம் குறித்து அமைதியாக உள்ளது.

பா.ஜ., தலைமையில் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளான, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை மீண்டும் கூட்டணியில் வரப் போகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க.,வும் கூட்டணியில் சேர வேண்டும் என, பா.ஜ., தலைமை விரும்புகிறது.

'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லவே இல்லை' என, பல முறை பழனிசாமி கூறினாலும், அ.தி.மு.க., வர வேண்டும் என பா.ஜ., தலைமை காத்திருக்கிறது.

'பழனிசாமியை விரோதித்துக் கொள்ள வேண்டாம்' என்பதால், பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை தமிழக பயணத்தின் போது மோடி சந்திக்கவில்லையாம். இன்னொரு பக்கம் பா.ம.க.,வையும் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us