2025ல் டில்லி; 2026ல் தமிழகம் கேக் வெட்டி பா.ஜ.,கொண்டாட்டம்
2025ல் டில்லி; 2026ல் தமிழகம் கேக் வெட்டி பா.ஜ.,கொண்டாட்டம்
ADDED : பிப் 08, 2025 07:13 PM

திருப்பூர்:'டில்லி 2025; தமிழகம் 2026ல்' என குறிப்பிட்டு, 'இண்டியா கேட்' வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்ற வெற்றியை, திருப்பூர் பா.ஜ.,வினர் கொண்டாடினர்.
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.,வினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அவிநாசி, திருப்பூர், பல்லடம் என பல இடங்களில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பு வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில செயலர் மலர்கொடி உள்ளிட்ட கட்சியினர் திரண்டு கேக் வெட்டி கொண்டாடினர். கொண்டாட்டத்துக்கு தயார் செய்யப்பட்டிருந்த கேக், 'இண்டியா கேட்' வடிவில் அமைக்கப்பட்டு, அதில், 'தற்போது டில்லி 2025, விரைவில் தமிழகம், 2026ல்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

