தாகம் தீரவில்லை., சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் கெஜ்ரிவால்
தாகம் தீரவில்லை., சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் கெஜ்ரிவால்
UPDATED : மே 31, 2024 01:01 PM
ADDED : மே 31, 2024 12:51 PM

புதுடில்லி: கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அருகில் உள்ள மாநிலங்கள் உதவ மறுக்கின்றன. இதில் கோர்ட் தலையிட வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. தண்ணீர் மற்றும் மின்சாரம் பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் மின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்கள் போல் மின்தடை செய்யாமல் மின்சாரம் சீராக வழங்கி வருகிறோம். ஆனால் இந்த பிரச்னையை அரசியலாக்கின்றனர்.
மக்கள் நலன் கருதி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். அருகில் உள்ள பா.ஜ., அரசு நடக்கும் ஹரியானா, உபி., அரசுகள் கூடுதல் தண்ணீர் வழங்க கேட்டு கொள்ள வேண்டும்.டில்லி மக்கள் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு டேங்கர் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் வரும் ஒரு மாதத்திற்கு மட்டும் கூடுதல் தண்ணீர் வழங்க உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ., போராட்டம்
டில்லியில் குடிநீர் பிரச்னையை கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.