வங்கதேசத்தில் 'டெலிவரி' தாமதம் இந்தியாவுக்கு திரும்பும் ஆர்டர்கள்
வங்கதேசத்தில் 'டெலிவரி' தாமதம் இந்தியாவுக்கு திரும்பும் ஆர்டர்கள்
ADDED : ஜன 04, 2025 11:52 PM

திருப்பூர்:வங்கதேசத்தில் நிலவும் உள்நாட்டு குழப்பத்தால், உரிய நேரத்தில் 'டெலிவரி' கிடைக்காமல், நீண்டகால தொடர்பில் இருந்த வர்த்தகர்கள், இந்தியாவை நோக்கி வரத்துவங்கியுள்ளனர்.
ஷேக் ஹசீனா அதிபராக இருந்த காலகட்டத்தில், இந்தியா - வங்கதேசம் இடையே, நல்லுறவு இருந்தது.
ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில், சீனாவுக்கு அடுத்தபடியாக, வங்கதேசம் இரண்டாவது இடத்தில் இருந்தது.
இந்தியா பல்வேறு சலுகைகள் வழங்கி வந்தது, நம்நாட்டு ஜவுளி வர்த்தகர்களுக்கே கடும் போட்டியாக மாறியது.
தற்போதைய ஆட்சியில், வங்கதேச ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு, உரிய நேரத்தில் ஆடைகள் டெலிவரி செய்யப்படவில்லை.
இதனால், நீண்டகால தொடர்பில் இருக்கும் வர்த்தகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வங்கதேசத்துக்கு மாற்றாக, இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய, ஜவுளி இறக்குமதி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் முடிவு செய்துஉள்ளனர்.
இதன்காரணமாக, பிப்., மாதத்தில் இருந்து, ஆயத்த ஆடைகளுக்கான புதிய ஆர்டர் வரத்து அதிகரிக்கும் என முன்னணி ஏற்றுமதியாளர்கள் கணித்துள்ளனர்.