ADDED : ஜன 05, 2024 01:41 AM
திருப்பூர்:அனைத்து துறைகளிலும் தோல்வி; நிர்வாக சீர்கேடு போன்றவற்றை கண்டித்து ஆளும் தி.மு.க., அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
ஹிந்து மக்கள் கட்சி - தமிழக தலைவர் அர்ஜூன்சம்பத் அறிக்கை: ென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவில்லை; நிவாரணப் பணிகளும் முறையாக இல்லை. எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர் கூடத் தேங்காது என்று கூறியது எப்படி செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது ஏன்
கவர்னர் நடத்திய வெள்ள பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன். எதிர்க்கட்சியாக இருந்த போது 5000 ரூபாய் பொங்கல் பரிசு கேட்ட தி.மு.க., தற்போது ஆளும் கட்சியான பின் தராதது ஏன்? மத்திய அரசு தேவையான நிதியை வழங்கியும் வீண் பழி சுமத்துவது ஏன் வானிலை ஆய்வு மையம் மீது தவறான விமர்சனம் வைத்தது ஏன் எனக் கேட்டும் அரசு நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகளை கண்டித்தும் இந்த அரசு பதவி விலக வலியுறுத்தியும் 11ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.