டிரைவரின் கணக்கில் 'டிபாசிட்' வங்கி பதில் அளிக்க உத்தரவு
டிரைவரின் கணக்கில் 'டிபாசிட்' வங்கி பதில் அளிக்க உத்தரவு
ADDED : பிப் 03, 2024 12:23 AM
மதுரை:சென்னையில் கார் டிரைவர் வங்கி கணக்கில் 9,000 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு, மீண்டும் அப்பணத்தை வங்கியால் எடுத்துக்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கி பதில் அளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு துணைத் தலைவர் செண்பகமூர்த்தி என்பவர் நேற்று முன் தினம் தாக்கல் செய்த மனு:
சென்னை கோடம்பாக்கம் கார் டிரைவர் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் கடந்தாண்டு செப்., 9ல் தனியார் வங்கியால், 9,000 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டது. அடுத்த அரைமணி நேரத்தில், அந்த பணத்தை வங்கியே மீண்டும் எடுத்துக்கொண்டது.
இது குறித்து புகாரளித்தும் ரிசர்வ் வங்கி இதுவரை விசாரணை நடத்தவில்லை. எனவே, குழு அமைத்து விசாரித்து அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
'மனுவிற்கு தனியார் வங்கி தரப்பில் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

