ADDED : மே 03, 2025 01:14 AM

வீட்டு வரி கட்டினால் தான், நுாறு நாள் திட்டத்தில் வேலை என கிராமங்களில் கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்கின்றனர். இனி ஒவ்வொரு ஆண்டும் வீட்டு வரி உயரும். பணத்தை கையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என, ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்.
தமிழக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. தற்போது, இரண்டு அமைச்சர்கள் நீதிமன்றத்தால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். மற்ற அமைச்சர்கள் மீதும் தொடர்ச்சியாக வழக்குகள் வரும்.
ஒரு வழக்கு போட்டதுமே ஓடி ஒளிந்து விட்டார், துணை முதல்வர் உதயநிதி.
கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களை காப்பாற்றவும், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீண்டும் பெறவும் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதுதான் அனைவருக்கும் நல்லது.
- சி.வி.சண்முகம்
முன்னாள் அமைச்சர்

