ADDED : ஏப் 21, 2024 04:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்தே தமிழகத்தில் காவல் மரணங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்க்கிறது.
அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கண்டனம். பொது மக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே, நடந்து கொள்ள வேண்டும் என போலீசாரையும் அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

