பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஆறு, கடலில் தடுப்பான்கள்
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஆறு, கடலில் தடுப்பான்கள்
ADDED : ஜன 17, 2024 02:38 AM

சென்னை : 'ஆறுகள், கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை தடுத்து அகற்ற, தடுப்பான்கள் அமைக்கப்படும்' என, தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
உலக வங்கி உதவியுடன், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,675 கோடி ரூபாயில், கடலோர மறு சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், ஆறுகள் மற்றும் கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சென்று சேருவதை தடுத்து அகற்ற, தடுப்பான்கள்அமைக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க, தடுப்பான்கள் அமைப்பது போன்ற பல முயற்சிகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசு செயல்படுத்தவுள்ள, 1,675 கோடி ரூபாயிலான திட்டத்தின்படி, நாகை, சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள், தஞ்சை கடல்பசு பாதுகாப்பு மையம், பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னை சதுப்பு நிலங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட, ஒன்பது திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

