தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!


ADDED : அக் 29, 2025 10:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2025 10:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமுதி; பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63_வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 8000 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

காவல் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41) என்பவர் வந்துள்ளார். இவர் நேற்று இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இருமல் தொடர்ச்சியாக ஏற்பட ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த கலைவாணியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us