தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்


ADDED : பிப் 10, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:தை அமாவாசையை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர்.

தை அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.

கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின்னர் அக்கடலில் புனித நீராடினர்.

இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசித்தனர்.

காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மனும், தங்க கருட வாகனத்தில் ராமர்,சீதையும் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு மகா தீபாராதனை நடந்ததும், பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கும் உற்ஸவம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us