ADDED : செப் 06, 2025 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''தமிழக போலீசார் பயம் மற்றும் பாரபட் சம் இல்லாமல், நீதியை நிலைநாட்ட வேண்டும்,'' என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட ராமன் பேசினார்.
சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் நடந்த காவலர் தின நிகழ்ச்சியில், 2023ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 46 சிறந்த காவல் நிலையங்களின் அதிகாரிகளுக்கு, 'முதல்வர் விருது' வழங்கி, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் கவுரவித்தார்.
பின், அவர் பேசியதாவது:
கடமை, மரியாதை, சேவைகளுக்கு, போலீ சார் தங்களை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும். பயம் மற்றும் பாரபட்சம் இல்லாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும். ஒழுக்கம் மற்றும் நேர்மையை பேண வேண்டும். பொது மக்களுக்கு இரக்கத்துடன் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.