ADDED : ஜன 04, 2024 10:42 PM
சென்னை:குழந்தைகள் மிகவும்விரும்பி சுவைக்கும்'கோபிகோ காபி கேண்டி'யின் விளம்பர துாதராக, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்ட கோபிகோ காபி கேண்டி, உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற முதல் கேண்டியான இதை, அசல் காபியும், பாலும் கலந்து தயாரிக்கின்றனர். இதனால் தான், இந்தளவுக்கு புகழ் பெற்றுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனியும், ராஞ்சியில் பிறந்து, தன் உண்மையான பண்புகள் மற்றும் செயல்பாடுகளால், உலகின் முன்னணி வீரராக ஜொலிக்கிறார்.
அவருக்கு பிடித்தமான கோபிகோ காபி கேண்டியின் விளம்பர துாதராகி, இந்தியாவின் முன்னணி நிறுவனமாக்கும் வகையில், அதன் விளம்பரங்களில் தோனி தோன்றுவார்.
இதற்கான ஒப்பந்தத்தை, மயூரா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அச்யுத் காசி ரெட்டி, தோனியிடம் வழங்கினார்.