ஓடும் பஸ்சில் டீசல் கசிவு சிறுபாக்கம் அருகே பரபரப்பு
ஓடும் பஸ்சில் டீசல் கசிவு சிறுபாக்கம் அருகே பரபரப்பு
ADDED : பிப் 04, 2025 06:21 AM
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே ஓடும் அரசு பஸ்சில் டீசல் கசிந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடியிலிருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையத்திற்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் சென்றது. 30 பயணிகளுடன். காலை 10:45 மணியளவில் திட்டக்குடி - சிறுபாக்கம் சாலையில், மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, பஸ்சின் டேங்கிலிருந்து டீசல் வெளியேறி கீழே கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். டீசல் வெளியேறுவதை தடுக்க முடியாததால், உடனடியாக பயணிகளை இறக்கி விட்டு, வேறு வாகனங்களில் செல்லுமாறு கூறினர். இதுகுறித்து, போக்குவரத்து பனிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊழியர்கள் வந்து பஸ்சை எடுத்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கு பழுதடைந்த அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

