ADDED : ஏப் 26, 2025 01:38 AM
சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செந்தில்குமார்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்தனர். அதிலிருந்து என்.எல்.சி.,யை காக்க, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, 5 சதவீத பங்குகளை வாங்கியவர் ஜெயலலிதா.
அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க, மத்திய பா.ஜ., அரசு முயற்சித்து வருகிறது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க., இதை ஏற்கிறதா?
அ.தி.மு.க., - வேலுமணி: கொள்கை வேறு; கூட்டணி வேறு. நாங்கள் பா.ஜ.,வுடன் தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளோம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அப்படியெனில் கொள்கையை சமரசம் செய்து, கூட்டணி வைத்துள்ளீர்களா?
வேலுமணி: ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே.
இவ்வாறு விவாதம் நடந்தது.