தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் 60 சதவீதம் நிறைவு

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் 60 சதவீதம் நிறைவு

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் 60 சதவீதம் நிறைவு


ADDED : அக் 14, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில், நடத்தப்படும் தமிழக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி, 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன,’’ என, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் மதுமிதா தெரிவித்தார்.

தனியார் நிறுவனமான ‘ரீவின் ஹெல்த்’ சார்பில், ‘ஆட்டிஸம், டிஸ்லெக்ஸியா’வால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தளமான ‘ஜாது’வின் அறிமுக நிகழ்ச்சி நேற்று, சென்னையில் நடந்தது.

அதில், ‘ஜாது’ தளத்தை தொடங்கி வைத்து, மதுமிதா பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிந்துரை, மறுவாழ்வு சிகிச்சை, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை துல்லியமாக மதிப்பிடும் வகையில், வீடுவீடாக சென்று, மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறோம். இந்த பணிகள் தற்போது வரை, 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

திட்டமிட்டபடி டிசம்பருக்குள் முழுமையான தரவுகள் திரட்டப்படும். இதன்பின், மாற்றுத்திறனாளிகள் அரசை தேடி வந்து உதவி கோருவதற்கு பதில், அரசே, அவர்களின் இல்லம் தேடிச் சென்று, அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளை செய்யும்.

தமிழகத்தில், 80 லட்சம் பேர் நரம்பியல் வளர்ச்சி மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது. அரசின் நேரடி கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, 1.5 முதல் 2 சதவீதம் வரை, அதாவது 9.58 லட்சம் பேர் மட்டுமே இருக்கக் கூடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us