தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘பேஸ்புக்’கில் வந்த ‘லிங்க்’கை நம்பி ஏமாந்த அதிகாரி

‘பேஸ்புக்’கில் வந்த ‘லிங்க்’கை நம்பி ஏமாந்த அதிகாரி

‘பேஸ்புக்’கில் வந்த ‘லிங்க்’கை நம்பி ஏமாந்த அதிகாரி


UPDATED : அக் 14, 2026 06:02 PM

ADDED : அக் 14, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:02 PM ADDED : அக் 14, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’கில் வந்த விளம்பர ‘லிங்க்’கை தொட்ட, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து, 45 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர்.

சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 65 வயது நபர், தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தற்போது, மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 12ம் தேதி, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் இவரது பக்கத்தில், விளம்பரத்துக்கான ‘லிங்க்’ ஒன்று வந்துள்ளது. அதை திறந்ததும், இவரது வங்கி கணக்கில் இருந்து, 45 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர்.

இதுகுறித்து, ‘1930’ என்ற தொலைபேசி எண்ணில், சைபர் குற்றப்பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். இப்புகார், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. விளம்பர ‘லிங்க்’ வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us