ADDED : ஏப் 12, 2025 02:14 AM
சென்னை:சென்னையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அ.ம.மு.க., இடம் பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணியை முடிவு செய்வதற்காக, சென்னை வந்தார். இந்நிலையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனுக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது. நேற்று மருத்துவமனையின் மருத்துவ சேவை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கையில்,'வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக, தினகரன் அனுமதிக்கப்பட்டார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.