நாளை மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆரம்பம் n உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிபுணர்கள் n எங்கு, என்ன படிக்கலாம் என்பதை விளக்கும் கல்வி அரங்குகள்
நாளை மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆரம்பம் n உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிபுணர்கள் n எங்கு, என்ன படிக்கலாம் என்பதை விளக்கும் கல்வி அரங்குகள்
ADDED : மார் 26, 2026 05:11 AM
மதுரை: பிளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பல்வேறு பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (மார்ச் 27) துவங்குகிறது.
பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி, உறுதியான எதிர்காலத்திற்கான முழுமையான வழிகாட்டுதல் அளிக்கும், அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால் ஏராளமான ஆலோசனைகள் வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இந்தாண்டும் பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடும், 'ஏஐ' யுக கனவுகளை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு வழிகாட்ட வருகிறது இந்த அற்புதமான கல்வி நிகழ்ச்சி. நாளை துவங்கி, மார்ச் 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஏராளமான கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கல்வி கண்காட்சியும் கருத்தரங்குகளும் நடக்கின்றன.
கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கின்றன.
காலை, மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நிகழ்ச்சியின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட், டேப், வாட்ச் பரிசாக வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம்.
இணைந்து வழங்குபவர்கள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கோவை கே.எம்.சி.எச்., அன்ட் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், செட்டிநாடு அகாடமி ஆப் ரிசர்ச் அன்ட் எஜூகேஷன், சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங். ஆடியோ பார்ட்னர் இன்போ பஸ்.
முன்பதிவுக்கு 'ஸ்கேன்' செய்யுங்கள்
வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். இங்குள்ள கியூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது 95667 77833 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு RGN என டைப் செய்தோ அனுப்ப வேண்டும்.
அனுமதி இலவசம்
