ADDED : ஜன 25, 2025 02:34 AM
சென்னை:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீரிடம், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறையும் நுழைந்தது. ஜாபர் சாதிக், அமீர் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
போதைப் பொருட்கள் விற்பனை வாயிலாக கிடைத்த பணத்தை, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் மீது, அமலாக்கத்துறை தனி வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கு, 13வது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில்வேலவன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சிறையில் உள்ள ஜாபர் சாதிக், அவரது சகோதர் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட, ஐந்து பேர் ஆஜராகினர். வழக்கை பிப்ரவரி 7க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

