ADDED : ஜன 06, 2026 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதி ராஜாவுக்கு, 84, உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கடுமையான நுரையீரல் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவுக்கு, அதிதீவிர மருத்துவ கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைந்திருப்பதால், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனாலும், தொடர்ந்து அதிதீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

