உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 09:12 PM
ADDED : அக் 10, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஆசிய விளையாட்டு போட்டியில், இரு வெண்கல பதக்கங்கள் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, மின் பகிர்மான கழக விளையாட்டு துறை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மின் பகிர்மான கழகத்தில், விளையாட்டு துறை துணை இயக்குனராக ஜோஷ்னா சின்னப்பா பணியாற்றி வருகிறார். ஸ்குவாஷ் போட்டியில் நீண்ட காலமாக சிறந்து விளங்கி வரும் அவர், ஜப்பானில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரு வெண்கல பதக்கங்களை வென்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இவரது சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில், 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை, முதல்வர் விஜய் வழங்கினார். தற்போது, விஜய் உத்தரவின்படி, ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு துறை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
