மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 28, 2025 10:19 PM
சென்னை:மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிப்பதற்காக வழங்கப்படும், 'கவின்கேர் எபிலிட்டி' விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கவின்கேர் மற்றும் எபிலிட்டி பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை, விடாமுயற்சியை அங்கீகரிக்கும் வகையில், கவின்கேர் மற்றும் எபிலிட்டி பவுண்டேஷன் ஒருங்கிணைந்து, 24வது கவின்கேர் எபிலிட்டி விருது வழங்க உள்ளது. இதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த 2003 முதல், தன்னம்பிக்கை, திறமை, விடா முயற்சி வாயிலாக சாதித்த 101 சாதனையாளர்கள் கவுரவிக்கப் பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, இரண்டு பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். அதாவது, மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், சமூகத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு அமைப்பின் நிறுவனராக செயல்படுவோருக்கு, 'கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது' வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த துறையில், சிறப்பான சாதனையை நிகழ்த்தியவர்களுக்கு, 'கவின்கேர் எபிலிட்டி மாஸ்டரி' விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு, சுயமாகவோ, மற்றவர்களை பரிந்துரை செய்தோ, www.abilityfoundation. org, www.cavinkare.com இணையதளம் மற்றும் 98400 55848 என்ற மொபைல் எண் வழியாக, நாளை வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

