கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி அய்யப்ப பக்தர்
கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி அய்யப்ப பக்தர்
UPDATED : நவ 19, 2024 04:23 AM
ADDED : நவ 19, 2024 12:17 AM

பட்டிவீரன்பட்டி : கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர் பரசுராமர், 25. மாற்றுத்திறனாளியான இவர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மூன்று சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்த பரசுராமர், தேசிய நெடுஞ்சாலையை தவறவிட்டு, எம்.வாடிபட்டி கோபாலசமுத்திரம் கண்மாய் செல்லும் ரோட்டில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சென்றார்.
அங்கு பாதையில் இருந்த சேற்றில் சிக்கி வாகனத்தை மீட்க முடியாமல் போராடினார். பின், கர்நாடகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை அணுகினர்.
தொடர்ந்து, வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலை மணி, எஸ்.ஐ., ஷேக் அப்துல்லா ஆகியோர் அதிகாலை 2:00 மணிக்கு நேரில் சென்று, சேற்றில் சிக்கிய பரசுராமரை வாகனத்துடன் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

