உள்ளடக்கத்திற்கு செல்ல

தி.மு.க., வாக்குறுதியை நம்பி ஓட்டளித்தவர்களுக்கு ஏமாற்றம்
தி.மு.க., வாக்குறுதியை நம்பி ஓட்டளித்தவர்களுக்கு ஏமாற்றம்
ADDED : ஜன 07, 2026 08:11 AM

அ நிறம் | அளவு
தமிழக அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 'பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதை நம்பி, தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம். பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தை பிடித்துக்கொண்டு அதற்கு வட்டி தருவது. அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது.
ஆனால், தி.மு.க., அரசு தற்போது அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அப்படி தராது. இதில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தின் முழுப்பயன் கிடைக்காது' என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதியை கவனத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தி.மு.க., அரசு அமல்படுத்த வேண்டும்.
- வாசன் தலைவர், த.மா.கா.,
