கீழடி 9ம் கட்ட அகழாய்வில் படிக எடை கல் கண்டெடுப்பு
கீழடி 9ம் கட்ட அகழாய்வில் படிக எடை கல் கண்டெடுப்பு
ADDED : ஆக 08, 2023 05:21 PM

கீழடி: கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் படிக எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் தொடங்கப்பட்டு இதுவரை ஒன்பது குழிகளில் தங்க அணிகலன், ஆட்டக்காய்கள், விலங்கின சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட 183 பொருட்கள் கண்டறியப்பட்டன.
தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்பதால் கட்ட அகழாய்வில் 175 செ.மீ., ஆழத்தில் எட்டு கிராம் எடையும் ஒன்றரை செ.மீ., உயரமும் கொண்ட கீழ்ப்பகுதி தட்டையான வடிவத்தில் படிக எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த அகழாய்வில் பல்வேறு எடைகளில் எடைகற்கள் கண்டறியப்பட்ட நிலையில் முதல் முதலாக படிக எடைக்கல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வில் இரும்பு ஆணிகள், வட்டசில்லுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

