உள்ளடக்கத்திற்கு செல்ல

த.வெ.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு?: அமைச்சர் ரமேஷ் விளக்கம்
த.வெ.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு?: அமைச்சர் ரமேஷ் விளக்கம்
ADDED : செப் 26, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
திருச்சி: ''இடைத்தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., - த.வெ.க., இணைந்து ஆட்சியமைக்க, எவ்வித பேச்சும் நடக்கவில்லை,” என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி: பதவிக்காக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, அ.தி.மு.க., - தி.மு.க., இணைந்ததை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். எனவே, இடைத்தேர்தலில் த.வெ.க., வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியை பெறுவர்.
இடைத்தேர்தல் முடிவுக்கு பின், த.வெ.க.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை. அப்படியொரு பேச்சு நடந்ததாக அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., லீமாரோஸ் கூறி இருப்பது, அரசியலுக்காக தான். இவ்வாறு அவர் கூறினார்.
