sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மா.செ.,க்கள் முன்னிலையில் குறைகளை கேட்டால் சுதந்திரமாக சொல்ல முடியுமா? தி.மு.க.,வினர் அதிருப்தி

/

மா.செ.,க்கள் முன்னிலையில் குறைகளை கேட்டால் சுதந்திரமாக சொல்ல முடியுமா? தி.மு.க.,வினர் அதிருப்தி

மா.செ.,க்கள் முன்னிலையில் குறைகளை கேட்டால் சுதந்திரமாக சொல்ல முடியுமா? தி.மு.க.,வினர் அதிருப்தி

மா.செ.,க்கள் முன்னிலையில் குறைகளை கேட்டால் சுதந்திரமாக சொல்ல முடியுமா? தி.மு.க.,வினர் அதிருப்தி

1


ADDED : மே 17, 2025 04:10 AM

Google News

ADDED : மே 17, 2025 04:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) முன்னிலையில் தொகுதியில் உள்ள குறைகளை கேட்டால் எப்படி சுதந்திரமாக சொல்ல முடியும்; தொகுதி பொறுப்பாளர் தங்கம் தென்னரசு கண் துடைப்பாக கூட்டம் நடத்தலாமா' என மதுரை தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வினர் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கான தி.மு.க., தொகுதி பொறுப்பாளராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்ட பின் முதன்முறையாக மதுரையில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மா.செ.,க்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா பங்கேற்றனர். தொகுதி வாரியாக குறைகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஒரு சட்டசபை தொகுதியில் பகுதி/ஒன்றியம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 10 பேர் அழைக்கப்பட்டனர். அப்போது 'தொகுதியில் நிலவும் பிரச்னைகளை தெரிவியுங்கள்' என கூறப்பட்டது. அங்கு மா.செ.,க்கள் உடன் இருந்ததால் நிர்வாகிகளால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியவில்லை. வேறு வழியின்றி மா.செ.,க்களை மகிழ்விக்கும் வகையில் நிர்வாகிகள் பேசினர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: தொகுதிவாரியாக குறைகளை தெரிவிக்க 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக தொகுதிக்குள் உட்கட்சி பிரச்னை உள்ளதா, யாரால் அந்த பிரச்னை ஏற்பட்டது, தீபாவளி, பொங்கலின்போது உரிய 'பட்டுவாடா' நடந்ததா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. மா.செ.,க்கள் முன்னிலையில் இதுபோன்ற கேள்விகளுக்கு சுதந்திரமாக பதில் கூற முடியவில்லை. உண்மையான பதிலை தெரிவித்தால் மா.செ.,க்கள் எங்களை 'கட்டம் கட்டி' விடுவர். இது பொறுப்பாளருக்கும் தெரியும். மா.செ.,க்களையும் உடன் வைத்து குறைகளை கேட்கிறார். கூட்டம் கண்துடைப்பாக நடந்தது. மா.செ.,க்கள் இன்றி குறைகளை கேட்டால் உண்மை நிலவரத்தை தெரிவிக்க தயார் என்றனர்.

வெற்றிக்கு மதுரை அடித்தளம்

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: அதிக தொகுதிகளை பெற்றுள்ள மாவட்டம் மதுரை. இது தமிழக அரசியல் தட்பவெட்பங்களை தெளிவாக தெரிவிக்கும். அரசியல் கால நிலவரத்தை அறிய மதுரை ஒரு திசைகாட்டியாக இருக்கிறது. இங்குள்ள 10 தொகுதிகளை வெல்வதன் மூலம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற முதல்வர் ஸ்டாலினின் இலக்கை எளிதாக அடைய முடியும். 200 தொகுதிகளில் பெறும் வெற்றிக்கு மதுரை அடித்தளமாக இருக்கும். மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 1ல் முதல்வர் நடத்த உள்ளார். நிர்வாகிகள் கட்சிப்பணியை முதன்மை பணியாக கொள்ளுங்கள். தொகுதி நிலவரங்கள் தொடர்பாக வகுக்கும் வியூகங்களை இம்மாதம் இறுதிக்குள் முதல்வரிடம் சமர்ப்பிப்போம் என்றார்.அமைச்சர் மூர்த்தி பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை நிர்வாகிகள் வீடுகள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். வரும் தேர்தலில் 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்று முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்போதே தேர்தல் பணிகளை துவங்க வேண்டும், என்றார்.








      Dinamalar
      Follow us