முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் கொடுப்பதில்லை சத்துணவு திட்டத்தில் அதிருப்தி
முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் கொடுப்பதில்லை சத்துணவு திட்டத்தில் அதிருப்தி
ADDED : ஆக 29, 2025 04:25 AM
பொள்ளாச்சி: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப் பழம் அளிக்கப்படாததால் அதிருப்தி நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்கப்படுகிறது.
வாரந்தோறும், குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு, சாப்பாடு மற்றும் சாம்பார், தக்காளி சாதம், புளி சாதம், சுண்டல் சாதம் அல்லது பாசிப்பயிறு சாதம் மற்றும் காய்கறி சாதம் வழங்கப்படுகிறது. அதனுடன் தினமும், முட்டை வழங்கப் படுகிறது.
முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது உருளைக்கிழங்கு மசால் வழங்க வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், முட்டை சாப்பிடாத மாணவர் களுக்கு மாற்று உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 60 லட்சத்திற்கும் அதிகப்படியான மாணவர்கள் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.
அதில், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு புரதச்சத்தை சமன் செய்யும் வகையில், வாழைப்பழம் அல்லது உருளைக்கிழங்கு மசால் வழங்க வேண்டும்.
ஆனால், எந்த பள்ளி யிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் வழங்குவதில்லை.
முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு புரதச்சத்தை சமன் செய்யும் வகையில் உணவுப்பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.