ADDED : ஜன 08, 2025 01:32 AM
சென்னை:
தமிழக அரசு, 'கேபிள் டிவி' நிறுவனம் சார்பில், 50 லட்சம் புதிய, 'செட்டாப் பாக்ஸ்' வழங்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்த அரசு அறிக்கை:
அரசு கேபிள், 'டிவி' வாடிக்கையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் கோரிக்கையை ஏற்று, 50 லட்சம் எச்.டி., செட்டாப் பாக்ஸ் விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக 2 லட்சம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, ஆப்பரேட்டர் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தேவையான அளவு, 'எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள்' கையிருப்பில் உள்ளன.
தேவைப்படும் ஆப்பரேட்டர்கள், 500 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்து, செயலிழக்கும் நிலையில் உள்ள, பழைய செட்டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள் ஒப்படைக்க வேண்டும்.
தவறினால் அப்பகுதியில் புதிய கேபிள் ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்படுவர். புதிய ஆப்பரேட்டர்களாக பதிவு செய்ய விரும்புவோர்,என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.