sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன் வினியோகம்: தேர்தல் கமிஷனில் புகார்

/

 கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன் வினியோகம்: தேர்தல் கமிஷனில் புகார்

 கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன் வினியோகம்: தேர்தல் கமிஷனில் புகார்

 கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன் வினியோகம்: தேர்தல் கமிஷனில் புகார்


ADDED : மார் 19, 2026 06:16 AM

Google News

ADDED : மார் 19, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''திருப்பூர், கரூர், ஈரோடு கலெக்டர் அலுவலகங்களில், யாரால் யாருக்கு மொபைல் போன்கள் வழங்கப்பட்டன என்ற விபரத்தை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்த வேண்டும்,'' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை கூறினார்.

தி.மு.க., தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்த பின், அவர் அளித்த பேட்டி:



தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது என்பது விதி. ஆனால், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2,063 மொபைல் போன்களை, அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க இருந்தனர்.

இதுகுறித்து கேட்டபோது, தனக்கு தெரியவில்லை என, கலெக்டர் கூறியுள்ளார்.

அதன் பின், மொபைல் போன்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல திருப்பூர், கரூர், ஈரோட்டில் நேற்று முன்தினம் மொபைல் போன்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை யாரால் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விபரத்தை, தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, தி.மு.க., வக்கீல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,வினர் மீது ஊழல் கறை பூச நடத்தப்படும் நாடகம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், இன்பதுரையின் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.






      Dinamalar
      Follow us