மாவட்ட செயலர் கூட்டம்; மே 29, 30ல் அ.தி.மு.க., ஏற்பாடு
மாவட்ட செயலர் கூட்டம்; மே 29, 30ல் அ.தி.மு.க., ஏற்பாடு
ADDED : மே 17, 2025 03:31 AM

சென்னை: சென்னையில் அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 29, 30ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், வரும் 29, 30ம் தேதிகளில், கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கஉள்ளது.
வரும் 29ம் தேதி காலை 9:30 மணிக்கு, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கும்.
பிற்பகல் 3:30 மணிக்கு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கும். 30ம் தேதி காலை 9:30 மணிக்கு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களின் செயலர்கள் கூட்டம் நடக்கும்.
அன்று பிற்பகல் 3:30 மணிக்கு, சென்னை மாநகரில் உள்ள எட்டு மாவட்டங்கள், சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.