ADDED : ஜன 29, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது: புதுமைப்பெண் திட்டத்தில் நிதியுதவி ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 2 லட்சத்து 11,000 பேர் பயனடைந்து வருகின்றனர். இதனால், இடை நின்ற மாணவியர், 11,962 பேர் மீண்டும் கல்வி பயில்கின்றனர்.
தற்போது பணிபுரியும் பெண்களுக்காக 13 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் விடுதிகள் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.