ஓசூர் ஏர்போர்ட் இட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் 'டிட்கோ'
ஓசூர் ஏர்போர்ட் இட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் 'டிட்கோ'
ADDED : நவ 08, 2025 02:31 AM
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள ஓசூர் வி மான நிலைய திட்டத்துக்கு இட அனு மதி கேட்டு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், 'டிட்கோ' நிறுவனம் விரைவில் விண்ணப்பிக்க உள்ளது.
தமிழகத் தின் முக்கிய தொழில் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உருவெடுத்து வருகிறது. அம்மாவட்டத்தில், 2,000 ஏக்கரில், ஓசூர் விமான நிலையம் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கிருஷ்ணகிரி - கர்நாடகா மாநிலம் பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி தாலுகாவில், இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு விமான நிலையம் அமைக்க, மூன்று விதமான அனுமதிகளை, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டும். அதன்படி, ஓசூர் விமான நிலையத்திற்கு இடஅனுமதி கேட்டு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், 'டிட்கோ' நிறுவனம் விரைவில் விண்ணப்பிக்க உள்ளது.

