தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்
தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்
ADDED : ஆக 17, 2025 04:24 PM

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்லும் பயணிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 18) முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 18) முதல் தொடங்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை:
அக்டோபர் 17 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை நாளை(ஆகஸ்ட் 18)யும், அக்டோபர் 18 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை, நாளை மறுதினம் ஆகஸ்ட் 19 ஆம் தேதியும் புக்கிங் செய்யலாம்.
அதேபோல,அக்டோபர் 19 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 20 ஆம் தேதியும் அக்டோபர் 20க்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் புக்கிங் செய்யலாம்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.