ADDED : ஆக 17, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தீபாவளி பண்டிகை, வரும் அக்., 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று துவங்குகிறது. அக்டோபர் 16ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து, அக்., 17ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்., 18ம் தேதிக்கான முன்பதிவை நாளை மறுநாளும் செய்யலாம்.
அதேபோல, 19ம் தேதிக்கான முன்பதிவு வரும் 20ம் தேதியும், தீபாவளி நாளான, 20ம் தேதிக்கான முன்பதிவை, வரும், 21ம் தேதியும் செய்து கொள்ளலாம்.