உள்ளடக்கத்திற்கு செல்ல

தீபாவளி 'ட்ரிப்' முடிந்தது; சென்னை திரும்பிய பயணிகளால் திணறியது கிளாம்பாக்கம்
தீபாவளி 'ட்ரிப்' முடிந்தது; சென்னை திரும்பிய பயணிகளால் திணறியது கிளாம்பாக்கம்
ADDED : நவ 10, 2026 08:31 AM

அ நிறம் | அளவு
சென்னை; தீபாவளி பயணம் முடிந்து சென்னை திரும்பியவர்களால் கிளாம்பாக்கம் பஸ் முனையம் நிரம்பி வழிந்தது.
தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். பண்டிகையும், விடுமுறையும் முடிந்துவிட்டதால் நேற்றிரவு முதலே அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களும் குவிந்துள்ளதால், கிளாம்பாக்கம் நிரம்பி வழிகிறது.
மாநகர பஸ்கள், போக்குவரத்து கழக விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்களில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக கிளாம்பாக்கத்தில் இறங்கினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் ஊர் திரும்பியதால் வாகன போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டது.
