திமுக, அதிமுக கூட்டணிகள் காலாவதியான கருப்பு-வெள்ளை டிவி போன்றது: அன்புமணி ஒப்பீடு
திமுக, அதிமுக கூட்டணிகள் காலாவதியான கருப்பு-வெள்ளை டிவி போன்றது: அன்புமணி ஒப்பீடு
ADDED : ஏப் 02, 2024 12:35 PM

காஞ்சிபுரம்: ''திமுக, அதிமுக கூட்டணிகள் பழைய கருப்பு-வெள்ளை டிவி போன்று காலாவதியானது; தேசிய ஜனநாயக கூட்டணி எல்இடி, எல்சிடி டிவி போன்று புதுசு'' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இவர்களால் தமிழகத்திற்கு இனி எந்த பயனும் இல்லை. காலாவதியான இவர்கள் இனி தமிழகத்திற்கு தேவையில்லை. இரு கட்சிகளும் மாறி மாறி கொள்ளையடித்து நாசமாக்கி வருகின்றன.
பழைய மாடலை தான் இப்போது முதல்வர் ஸ்டாலின் 'திராவிட மாடல்' என்கிறார். பழைய பிளாக் அண்டு வொயிட் டிவி (கருப்பு-வெள்ளை டிவி) யாராவது வீட்டில் வைத்திருக்கிறீர்களா? அது காலாவதியாகி போய்விட்டது. அதுபோன்றதுதான் திமுக., அதிமுக., கூட்டணிகள். ஆனால், இங்குள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எல்.இ.டி., எல்.சி.டி., டிவி போன்றது; இதுதான் புதுசு. இவ்வாறு அவர் பேசினார்.

