தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு


UPDATED : மார் 28, 2026 02:40 PM

ADDED : மார் 28, 2026 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2026 02:40 PM ADDED : மார் 28, 2026 01:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திமுக கூட்டணி தொகுதிப் பட்டியலை இன்று (மார்ச் 28) முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவினரை சந்தித்த பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் 5 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது.

பெரும்பாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்து இருக்கிறது. தொகுதிகள் விவரங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடவுள்ளார். 234 தொகுதிகளையும் முதல்வர் தான் அறிவிப்பார். நிறைய கட்சிகள் இருக்க கூடிய நிலையில், ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்பது என்பது தவிர்க்க முடியாது.

ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்கும் போது அதை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளுடன் பேசி தான், ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டிய கட்டாயம் என்பது ஏற்படுகிறது. அந்த கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான கால அவகாசம் தான் இது.

இதனை இழுபறி என்கிற முறையில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 100 சதவீத வெற்றியை பெறும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.

இறுதியானது!

திமுக தலைமையும், தேமுதிக தலைமையும் பேசி சுமூகமாக 10 தொகுதி கையெழுத்திடப்பட்டுள்ளது. தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. தொகுதி விவரங்களை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us