sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டனம்

/

தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டனம்

தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டனம்

தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டனம்


ADDED : பிப் 13, 2024 04:28 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: சட்டசபைக்கு கவர்னரை அழைத்து வரும் போது, தேசிய கீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு, முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. துவக்கத்தில் முறைப்படி தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. உரை முடிந்து இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும். அந்த மரபுக்கு மாறாக, கவர்னர் நடந்து கொண்டது, தேசிய கீதத்தையே அவமதிக்கும் செயல்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: சட்டசபை மரபுக்கு எதிராக, தேசிய கீதத்தை துவக்கத்திலேயே இசைக்க வேண்டும் என காரணம் கூறி, கவர்னர் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து, கவர்னர் ரவி வெளியேறியது கடும் கண்டனத்துக்கு உரியது.

சட்டசபை துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவது, தமிழக சட்டசபை மரபு. அதை மாற்றும்படி கவர்னர் கோரியது திட்டமிட்ட சதி. தொடர்ச்சியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி, கவர்னர் செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: அரசியலமைப்பு சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும், சட்டசபையில் கவர்னர் ரவி நடந்து கொண்டது கண்டனத்துக்கு உரியது. தன் பதவிக்குரிய பொறுப்பை மறந்து, ஒரு கட்சி பிரதிநிதி போல, கவர்னர் செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் பதவியிலிருந்து விலகுவதோடு, தமிழகத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: தேசிய கீதத்தை கவர்னர் அவமரியாதை செய்தார் என்பதும் தெளிவாக வெளிப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய கவர்னர், ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் கவர்னர் ரவியை உடனே திரும்பப் பெற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன்: கூட்டத் தொடரை துவக்கி வைத்து உரையாற்ற வேண்டிய கவர்னர் ரவி, அரசியலமைப்பு கடமையை நிராகரித்து, மரபுகளையும் அத்துமீறி, தன் தாழ்ந்த தரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us