sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 முஸ்லிம் லீக், ம.ம.க.,வுக்கு தி.மு.க., 2 தொகுதிகள் ஒதுக்கீடு

/

 முஸ்லிம் லீக், ம.ம.க.,வுக்கு தி.மு.க., 2 தொகுதிகள் ஒதுக்கீடு

 முஸ்லிம் லீக், ம.ம.க.,வுக்கு தி.மு.க., 2 தொகுதிகள் ஒதுக்கீடு

 முஸ்லிம் லீக், ம.ம.க.,வுக்கு தி.மு.க., 2 தொகுதிகள் ஒதுக்கீடு

4


ADDED : மார் 01, 2026 06:22 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:22 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா, இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நேற்று இரவு, முதல் கட்சியாக முஸ்லிம் லீக், அதைத் தொடர்ந்து ம.ம.க.,வுடன் தி.மு.க., உடன்பாடு செய்தது. இரு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.

உடன்பாடு கையெழுத்தானதும் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டி:

அண்ணாதுரை காலம் முதல் தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் உள்ளது. எந்த தேர்தலாக இருந்தாலும் முஸ்லிம் லீக் கட்சியை முதலாவதாக அழைத்து, தொகுதிப் பங்கீடு செய்வதை தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது. அந்த அடிப்படையில், இந்த தேர்தலிலும் தி.மு.க., உடன்பாடு செய்துள்ளது.

கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டோம். இப்போது, இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கின்றனர். எனவே, புதுச்சேரியில் ஒரு தொகுதி வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம். காங்கிரசுடன் பேசி நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, ''வரும் தேர்தலில், ம.ம.க., இரண்டு தொகுதிகளில் போட்டியிடும். கடந்த தேர்தலில் பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றோம். இப்போது, எங்கே போட்டியிடுவது என விரைவில் முடிவு செய்வோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us