தி.மு.க.,வும் காங்கிரசும் தான் ஓட்டு திருடர்கள்: அர்ஜூன் சம்பத்
தி.மு.க.,வும் காங்கிரசும் தான் ஓட்டு திருடர்கள்: அர்ஜூன் சம்பத்
ADDED : ஆக 16, 2025 04:01 AM

திருப்பூர்: ''காங்., - எம்.பி., ரா குலின் ஓட்டுரிமையை பறித்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்'' என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் நேற்று நடைபெற்ற தேசியக் கொடி ஊர்வலத்தில் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
உலகளவில், பொருளா தாரத்தில் மூன்றாமிடத்தில் இருக்கும் நம் நாடு, முதலிடத்துக்கு வந்து விடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டதால், கூடுதல் வரியை டிரம்ப் விதிக்கிறார்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் சீன பொருட்களை புறக்கணிப்போம். இந்தியப் பொருட்களை ஆதரித்து, நாட்டின் பொருளாதா ரத்தை வளப்படுத்துவோம்.
காங்., - எம்.பி., ராகுல், முதலில் அடையாள அட்டையை எதிர்த்தார்; பின் ஓட்டுப்பதிவு மிஷினை எதிர்த்தார். தற்போது தேர்தல் கமிஷனையே எதிர்த்து வரு கிறார். அவரது ஓட்டுரி மையை பறித்து, தேர்தலில் போட்டியிட தடை விதித்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலில், கோவையில் அண்ணாமலை போட்டியிட்டபோது, பா.ஜ.,வுக்கு ஆதரவான ஓட்டுகளை, வாக்காளர் பட்டியலில் இருந்து தமிழக அரசு தான், நீக்கம் செய்தது. எனவே, தி.மு.க.,வும், காங்கிரசும் தான் ஓட்டு திருடர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.