ADDED : ஆக 09, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தி.மு.க.,வில், 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாக விவாதிக்க, வரும் 13-ம் தேதி, மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கு, அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம், வரும் 13-ம் தேதி, சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது.
அதில், 'ஓரணியில் தமிழகம்' உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்டச் செயலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.