sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க.,வில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்

/

 தி.மு.க.,வில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்

 தி.மு.க.,வில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்

 தி.மு.க.,வில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்


ADDED : மார் 16, 2026 06:44 AM

Google News

ADDED : மார் 16, 2026 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: தி.மு.க., சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்களை, கட்சி தலைவர் ஸ்டாலின், நாளை முதல் 22ம் தேதி வரை சந்தித்து, வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு நாளை நேர்காணல் நடக்கும்.

வரும் 18ம் தேதி காலை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி; மாலை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை; 19ம் தேதி காலை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி; மாலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும்.

வரும் 20ம் தேதி காலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை; மாலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி; 21ம் தேதி காலை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார்; மாலை புதுக்கோட்டை, கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்; 22ம் தேதி காலை, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு; மாலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு, சென்னை மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும்.

குறிப்பிட்ட தேதிகளில், மாவட்டச் செயலர் மற்றும் விண்ணப்பம் அளித்தவர்கள் வர வேண்டும். அவர்கள், தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வரக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us